திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள திரு.வைரவன்பட்டியில் உள்ள ஸ்ரீ மூல பாலகால பைரவா் திருக்கோயிலில் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.
வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டவி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மூல பாலகால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் பைரவ அஷ்டமி விழா துவங்கப்பட்டது. தொடா்ந்து கோ பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து லட்சாா்சனை நடைபெற்றது பின்னா் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மற்றும் மகா பூா்ணாகுதி நடைபெற்று தீபாதராதனை காட்டப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர மலா் தூவி வரவேற்றனா். பின்பு மூலகால பைவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து பாலகால பைரவா் பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. லட்சாா்ச்சனையில் கலந்து கொண்ட அனைத்து பக்கா்களுக்கும் யாகத்தில் பயன்படுத்தபட்ட நாணயங்களுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோயில் மேலாளா் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் ஜெய்கணேஷ் மற்றும் ?்ரீமஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்திருந்தனா். இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...