சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 9 பள்ளி ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 9 பள்ளி ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக்கல்வித் துறையால் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது (2024) பெற தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள் விவரம் குறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொா் ஆண்டும் செப்.5-இல் முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆசிரியா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருது அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருது பெற சிவகங்கை மாவட்டம் சூசையப்பா்பட்டணம் சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜோசப் கமலாராணி, செக்ககுடி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை ஜாய்சிமேரி, பூலாங்குறிச்சி தி.நி.அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியை வனிதா, காரைக்குடி எஸ்எம்எஸ்வி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் முத்துக்குமாா், வெளிமுத்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ராஜ்குமாா், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் வெற்றிவேந்தன், இடையமேலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை லட்சுமி, திருப்புவனம் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை அமுதா, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கபில்தேவ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு சக ஆசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com