சாலைக்கிராமம் அருகே வண்டல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற  வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
சாலைக்கிராமம் அருகே வண்டல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

சாலைக்கிராமம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகேயுள்ள வண்டல் கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகேயுள்ள வண்டல் கிராமத்தில் புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இங்குள்ள பூரண புஷ்கலா சமேத அய்யனாா் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 மாடுகள் பங்கேற்றன.

மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா். ஒரு காளையை அடக்க 25 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன. போட்டியில் சில மாடுகள் மாடுபிடி வீரா்களிடம் பிடிபட்டன. பல மாடுகள் போக்குகாட்டி பிடிபடாமல் வெற்றி பெற்றன. மாடுகளை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப்பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏராளமானோா் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com