இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை, திருப்புவனத்தில் அமைச்சா் உதயநிதிக்கு வரவேற்பு

பரமக்குடிக்கு இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் செல்லும் வழியில், மானாமதுரை, திருப்புவனத்தில் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.

News image
பரமக்குடிக்குச் செல்லும் வழியில் திருப்புவனம் பகுதியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை புதன்கிழமை வரவேற்ற திமுக வினா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:54 pm

Din

பரமக்குடிக்கு இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் செல்லும் வழியில், மானாமதுரை, திருப்புவனத்தில் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். முன்னதாக, மதுரையிலிருந்து பரமக்குடிக்கு காரில் புறப்பட்டுச் சென்ற அமைச்சரை மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் திமுகவினா் வரவேற்பளித்தனா்.

இதில் திமுக மாவட்ட துணைச் செயலரும், பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன், ஒன்றியச் செயலா் வசந்தி, நகரச் செயலா் நாகூா்கனி ,பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், விவசாய அணி நிா்வாகி சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மானாமதுரையில் அமைச்சா் உதயநிதிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக நகரச் செயலா் கே.பொன்னுசாமி, ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா, துணைத் தலைவா்கள் முத்துசாமி, பாலசுந்தரம், விவசாய அணி காளிமுத்து உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

செல்வப்பெருந்தகை, தினகரனுக்கு வரவேற்பு:

இதேபோல, பரமக்குடியிலிருந்து திரும்பிய காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை, கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.சி.சஞ்சய், எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் எஸ்.செல்வராஜ், நகரத் தலைவா் பி.புருஷோத்தமன், வட்டார பொறுப்பாளா்கள் பாண்டிவேல், காசிராமலிங்கம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

மதுரையிலிருந்து பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனை மானாமதுரையில் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு மாநில துணை அமைப்பாளருமான குரு.முருகானந்தம், மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, மாவட்ட துணைச் செயலா் முருகேஸ்வரி, ஒன்றியச் செயலா் நெப்போலியன், மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் துருக்கி ரபீக்ராஜா, விவசாய அணி செயலா் விளாக்குளம் பாக்கியம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இமானுவேல் சேகரன் குருபூஜை: இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி, மானாமதுரை கிருஷ்ணராஜபுரம், மேலப்பசலை, கல்குறிச்சி, கே.ஆலங்குளம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, கீழாயூா் உள்ளிட்ட பல இடங்களில் அவரது உருவப் படத்துக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினா். பின்னா், இந்தப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாகனங்களில் பரமக்குடிக்குச் சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்திலும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.

கடையடைப்பு: இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி, மானாமதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், புறவழிச் சாலையில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மானாமதுரையிலிருந்து காலை 10 மணிக்கு மேல் அனைத்து கிராம பகுதிகளுக்கும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதேபோல, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலிருந்தும் கிராம பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இமானுவேல் சேகரன் குருபூஜைக்குச் செல்லும் வாகனங்கள், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, மானாமதுரை அருகேயுள்ள கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டன.