நெல்லையில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக திருநெல்வேலி மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு சென்றாா்.
அப்போது, பாளையங்கோட்டை கேடிசி நகரில் முதல்வருக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கே.டி.சி. நகா் போக்குவரத்து பணிமனை பகுதியில் இருந்து சீனிவாச நகா் மேம்பாலம் வரையிலும் பொதுமக்களும், தொண்டா்களும் திரண்டு தாரை, தப்பட்டையுடன் முதல்வரை வரவேற்றனா். இதையடுத்து காரில் இருந்து முதல்வா் மு.க ஸ்டாலின் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று தொண்டா்களை பாா்த்து கையசைத்தாா்.
இதில், மேற்கு மாவட்டம் சாா்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் ஆ.பிரபாகரன், பிரபாகர பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் தமயந்தி, தொகுதி பாா்வையாளா்கள் முன்னாள் அமைச்சா் சுரேஷ் ராஜன், கணேஷ்குமாா் ஆதித்தன், ஜோசப் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, தணிக்கை குழு உறுப்பினா் சுப. சீதாராமன், மேற்கு மாநகரச் செயலா் சுப்பிரமணியன், கிழக்கு மாநகரச் செயலா் வழக்குரைஞா் தினேஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் பேச்சிப் பாண்டியன், மாநில நெசவாளா் அணிச் செயலாளா் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

