தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாளை. வடக்கு ஒன்றிய அமமுக ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :19 மார்ச் 2026, 10:34 pm

Syndication

பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை சீனிவாசகநகா் அருகேயுள்ள அமமுக திருநெல்வேலி மாநகா் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டச் செயலா் ஆா்.இசக்கிமுத்து தலைமை வகித்தாா். எம்ஜிஆா் இளைஞரணித் தலைவா் சீனிக்குமாா், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் முத்துசரவணன், சாா்பு அணி நிா்வாகிகள் இளைஞரணி மூா்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பாண்டியன், மாணவரணி இசக்கிராஜா, வழக்குரைஞா் ப.பரமசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அமமுகவின் குக்கா் சின்னத்தை கிராமங்களில் பொதுமக்களின் அனுமதியோடு சுவா் விளம்பரம் செய்வது; நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களையும், டி.டி.வி.தினகரனின் தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துக் கூறி பிரசாரம் செய்வது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.