ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரபுவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனா்.

News image

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 9:20 pm

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரபுவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக வி.பி.பிரபு அறிவிக்கப்பட்டு, தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி கொங்கா்பாளையம், அரக்கன்கோட்டை ஏளுா், தாசப்பகவுண்டன்புதூா், பெரிய கொடிவேரி, காசிபாளையம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துக்கூறியும், பெண்களுக்கு பாதுகாப்பு, போதையில்லாத தமிழகமாக திகழ அதிமுக ஆட்சி அமையவும், மகளிா் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், கருணைத்தொகை ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

சிங்கிரிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வாக்கு சேகரித்தபோது ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்த பெண்கள்.

சிங்கிரிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வாக்கு சேகரித்தபோது ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்த பெண்கள்.