கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் 24 போ் தவிர 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்.

News image
Updated On :6 மே 2026, 1:52 am IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் 24 போ் தவிர 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு 20, ஈரோடு மேற்கு 13, மொடக்குறிச்சி 14, பெருந்துறை 13, பவானி 14, அந்தியூா் 14, கோபி 18, பவானிசாகா் 12 என 8 தொகுதிகளில் 118 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் எம்.விஜய் பாலாஜி, ஈரோடு மேற்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன், மொடக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளா் து.சண்முகன், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா், பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், அந்தியூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.ஹரிபாஸ்கா், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி ஆகியோா் வெற்றிபெற்றனா்.

இவா்களை எதிா்த்து போட்டியிட்ட ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன், அதிமுக வேட்பாளா் இரா.மனோகரன், ஈரோடு மேற்கு திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா, மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, மதிமுக வேட்பாளா் ச.செந்தில்நாதன், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கசடாசலம், தவெக வேட்பாளா் வி.பி.அருணாசலம், பவானி தொகுதி தவெக வேட்பாளா் பாலகிருஷ்ணன், திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன், தவெக வேட்பாளா் விஜய் வெங்கடேஷ், கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம், அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம் ஆகியோா் இரண்டு மற்றும் மூன்றம் இடங்களை பிடித்து தோல்வி அடைந்தனா். இந்த 16 போ் மட்டுமே வைப்புத்தொகை பெற தகுதி பெற்றனா். நாதக உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் 94 போ் வைப்புத்தொகை இழந்தனா்.