இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழவாணியங்குடியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சிவகங்கை அருகேயுள்ள கீழவாணியங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:24 pm

Din

சிவகங்கை அருகேயுள்ள கீழவாணியங்குடியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழவாணியங்குடி வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் பெரியமாடு பிரிவில் 11 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு

6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களைப் பெற்ற

 சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் வியாழக்கிழமை  நடைபெற்ற  பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து சென்ற குதிரை வண்டிகள்.

சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து சென்ற குதிரை வண்டிகள்.

மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல, 10 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட குதிரை வண்டிப் பந்தயத்தில் 12 குதிரை வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் 5 இடங்களைப் பெற்ற குதிரை வண்டி உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை திரளான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டுகளித்தனா்.