தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம்

சிவகங்கை மாவட்டம், சமூகநலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்திட ரூ.50,000 மானியம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 6:52 pm

Din

சிவகங்கை மாவட்டம், சமூகநலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்திட ரூ.50,000 மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூகநலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரா்கள், 25 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்களாகவும், கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருவா் ஒருமுறை மட்டுமே மானியம் பெறத் தகுதியுடையவராவா்.

மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான நபா்கள் இணையத்தை பயன்படுத்தி, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பின்னா், மேற்குறிப்பிட்ட ஆவண நகல்கள், தொழில் தொடங்குவதற்கான கருத்துருவை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பித்து, மானியம் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.