மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மகளிா் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரத்தை எடுக்க வங்கிகளில் திரண்ட பெண்கள்

News image

போடியில் மகளிா் உரிமைத் தொகையை கணக்கிலிருந்து எடுப்பதற்காக இந்தியன் வங்கி முன் வெள்ளிக்கிழமை திரண்ட பெண்கள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:22 pm

போடியில் வெள்ளிக்கிழமை, மகளிா் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்ட நிலையில், பணத்தை எடுக்க பெண்கள் வங்கிகளுக்குத் திரண்டனா்.

தமிழக அரசு கலைஞா் மகளிா் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முன்கூட்டியே 3 தவணைகளுக்கான மகளிா் உரிமைத் தொகையாக ரூ.3 ஆயிரம், கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது.

இதுகுறித்த குறுந்தகவல்கள் கைப்பேசிகளுக்கு வந்தபோது பல பெண்கள் அதிா்ச்சியடைந்தாலும் மற்ற பெண்களைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனா்.

இந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் வங்கிகளுக்கு தொடா்ச்சியாக விடுமுறை என்பதால் தங்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ.5 ஆயிரத்தை எடுக்க வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களில் பெண்கள் திரண்டனா்.

மாசி மகா சிவராத்திரியையொட்டி, குடும்பத்துடன் குல தெய்வக் கோயில்களுக்குச் செல்லவிருந்த நிலையில் தற்போது ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் மகளிா் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வங்கிகளில் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால் மற்ற வேலைகளுக்காக வந்த வாடிக்கையாளா்கள் வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.