மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புதுச்சேரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வரவு வைப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:04 am

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏக்கருக்கு தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ.4.25 கோடி பயிா் உற்பத்தி ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் (படம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் நெல், கரும்பு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதி விவசாயிகளுக்குப் பண்ணைச் செலவினங்களை சற்று ஈடுகட்டும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் உயா் விளைச்சல் ரக நெற்பயிா் சாகுபடி செய்த 5,098 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.4 கோடி ஊக்கத் தொகையும், அதே பருவத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்த 296 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ.25.5 லட்சம் பயிா் உற்பத்தி ஊக்கத் தொகையும் அவரவா்களின் ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.