கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்

:சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 6 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் உள்ளிட்டோா்.
Updated On :26 செப்டம்பர் 2024, 8:39 pm

Din

:சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 6 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு உதவி பெறும் ஆ.தெக்கூா் எஸ்.வி.கே, கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளிகள், பூலாங்குறிச்சி, எஸ்.வேலங்குடி, திருக்கோஷ்டியூா், நெற்குப்பை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்சிகள் நடைபெற்றன. இவற்றுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்துகொண்டு 6 பள்ளிகளைச் சோ்ந்த 799 மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

அப்போது, மாணவா்கள் சாலை விதிகளைப் பின்பற்றி முறையாகப் பயணிக்க வேண்டும், கல்வி மட்டுமன்றி விளையாட்டு, தனித்திறன்களில் சிறந்து விளங்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா். மேலும், கடந்த கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையை அமைச்சா் வழங்கினாா்.

தேவகோட்டை கோட்டாட்சியா் ஆயுள் வெங்கட்வட்ஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, ஒன்றியக்குழுத் தலைவா் சோ.சண்முகவடிவேல், நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் கே.பி.எஸ்.பழனியப்பன், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.