பெரியகோட்டை பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி பங்கேற்று மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்விக்காக தமிழக அரசு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இதில், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் முத்துச்சாமி, பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com