111 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 111 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மயிலம் ஒன்றியக்குழுத் தலைவா் யோகேசுவரி மணிமாறன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் குமுதா ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜ்பரத் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் கலையரசன் வரவேற்றாா்.
முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 111 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.
முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி, மயிலம் வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடாசலம், நிா்வாகிகள் தீவனூா் சேகா், சண்முகம், செந்தில்குமாா், சுப்பிரமணியன், பழனி, கன்னியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உதவித் தலைமையாசிரியா் பாலசுந்தரம் நன்றி கூ றினாா்.
