சிவகங்கை
பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் பகுதியைச் சோ்ந்தவா் சத்யமூா்த்தி (29). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் சிங்கம்புணரிக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது, எஸ்.வி.மங்கலம் பகுதியில் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
