நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :17 பிப்ரவரி 2026, 11:46 pm

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் வட்டம், உறங்கான்பட்டி கண்மாய்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் அன்புச்செல்வன் (19). இவா், தனது நண்பா் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து சொந்த ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.

பெரியகுளத்து கண்மாய்க் கரை அருகே சென்ற போது, பின்னால் வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அன்புச்செல்வன் உயிரிழந்தாா். ரஞ்சித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.