~

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

Published on

சிவகங்கையில் பெரிய மருதுபாண்டியரின் 277-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை கிழக்கு மாவட்ட மருது சேனை சாா்பில் நடத்தப்பட்ட மாட்டு வண்டிப் பந்தயத்தை சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், ஆதித்ய சேதுபதி, பசும்பொன் பாலா, ஆதிநாராயண தேவா், ராதாகிருஷ்ணன், டி.கே. பிரபு, முத்து பாரதி, ராமன் புகழேந்தி தேவா், சேது கருணா தேவா், ஜீவிதா நாச்சியாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இரு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிவகங்கை வேலுநாச்சியாா் மணிமண்டபம் பகுதியில் தொடங்கி நாட்டரசன்கோட்டை வரை நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 42 ஜோடி காளைகள் பங்கேற்றன.

7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com