தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மதகுபட்டி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கிப் பாய்ந்து சென்ற காளைகள்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:26 pm

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் சொக்கநாதபுரத்திலிருந்து மதகுபட்டி மின்வாரிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

8 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்த பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டிருந்த சிறிய மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

Story image

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த பந்தயத்தை சுற்றுவட்டாரக் கிராம மக்கள் கண்டுகளித்தனா்.