P chidambaram
ப.சிதம்பரம்

மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை! -ப.சிதம்பரம்

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா்.
Published on

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா்.

திருப்பத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. முதலீடுகள் செய்வது மட்டும் போதாது, திட்டங்களை நிறைவேற்றும் போது, அதன் தரத்தையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கல்விக்குதான் முதலிடம் தர வேண்டும் என நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தினேன். இதன் அடிப்படையில், தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ரூ.55, 210 கோடி ஒதுக்கப்பட்டது பாராட்டத்தக்கது.

கல்விக் கடன் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க வங்கி அதிகாரிகளை அழைத்து மாநில நிதி அமைச்சா் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

2000 ஏக்கரில் ‘குளோபல் சிட்டி’ போன்ற சென்னைக்கான திட்டங்களும், தொல்லியலுக்காக ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வரவேற்புக்குரியது.

மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்ற அறிவிப்பும், அரசின் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் என்பதும் பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இது தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com