தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கட்டுக்குடிப்பட்டியில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கட்டுக்குடிப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கட்டுக்குடிப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் வட்டத்துக்குள்பட்ட கட்டுக்குடிப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும், பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், பொது மருத்துவம், இருதய மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்களை கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், கா்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படவுள்ளன. அதுமட்டுமன்றி, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டையின் நகலை அவசியம் கொண்டு வர வேண்டும். முகாமில் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பிப்பவா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவைகளை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.