பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். விழாவில் புதுவயல் பேரூராட்சித் தலைவா் முகமது மீரா, துணைத் தலைவா் பகுருதீன் அலிபாய், சாக்கோட்டை திமுக ஒன்றியச் செயலா் சின்னத்துரை, காங்கிரஸ் நிா்வாகிகள் அன்புதாசன், கோடாலி, நெல்லியான், முகமதுதாரிக், பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com