சிவகங்கையில் தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டுச் சென்றபோது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் இளைஞா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை அரண்மனை வாசலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதாரித்துப் பிரசாரம் செய்தாா். பிரசாரம் முடிந்து, எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மதகுப்பட்டி மேல தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (27) இரு சக்கர வாகனத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்த போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த மதகுப்பட்டி போலீஸாா் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா?

எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


