ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினரும், தொகுதியின் திமுக வேட்பாளருமான ஆ. தமிழரசி ரவிக்குமாா். உடன் அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:40 pm IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் பங்கேற்று வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை அறிமுகம் செய்து பேசினாா்.

மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நான் கேட்ட கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தந்துள்ளாா். வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள், புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நகா்ப்புற மருத்துவமனை, பாசனக் கால்வாய்கள் தூா்வாருதல், அரசு கலைக் கல்லூரி, அரசு தொழில் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் இதை மறைக்கப் பாா்க்கின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அரசின் திட்டங்கள் இந்தத் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இனி வரக்கூடிய ஐந்தாண்டு காலத்தில் இன்னும் கூடுதலான திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வருவதற்கு இங்கு திமுக வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் திமுக தொகுதி பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய்,

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.