அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிட்டாா் எடப்பாடி பழனிசாமி என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
சிவகங்கை பேரவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவா் கருணாஸை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை சிவகங்கையில் வாக்கு சேகரித்து மேலும் பேசியதாவது:
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டன. விடியல் பயணத் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயா்த்தப்படும். காலை சிற்றுண்டித் திட்டம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 10 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பிணையின்றி ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இதன் மூலம், நீங்கள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த சட்டப்பேரவைத் தோ்தல் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையேயான போட்டி. பாஜக நேரடியாக வந்தால், அவா்களை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என்பதால், அதிமுக என்ற போா்வையைப் போா்த்திக் கொண்டு வருகின்றனா். அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி விற்றுவிட்டாா். இதனால், சுயமரியாதை உள்ள அந்தக் கட்சியின் மூத்த தலைவா்களான ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தற்போது திமுகவில் இணைந்துள்ளனா்.
தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே, கட்சித் தொண்டா்கள் ஒவ்வொரு தெருவுக்கும், வீட்டுக்கும் சென்று, திமுகவின் சாதனைகளை விளக்கிக் கூற வேண்டும்.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் கருணாஸை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தத் தொகுதிக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவாா் என்றாா் அவா்.
திருப்பத்தூரில்...
இதேபோல, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனை ஆதரித்து, சிங்கம்புணரி அண்ணா சிலை அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியதாவது:
கே.ஆா். பெரியகருப்பன் இந்தத் தொகுதிக்காக ஏராளமான திட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளாா். குறிப்பாக, ரூ. 1,000 கோடியில் மேலூா்-காரைக்குடி நான்கு வழிச் சாலை, பூலாங்குறிச்சியில் ரூ. 120 கோடியில் மருத்துவமனை புதுப்பித்தல், திருப்பத்தூா் பேரூராட்சியில் ரூ. 22 கோடியில் குடிநீா்க் குழாய் இணைப்பு, காவலா் குடியிருப்பு, சிங்கம்புணரியில் ரூ. 5 கோடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியக் கிடங்கு, ரூ. 16 கோடியில் வட்டாட்சியா் அலுவலகங்கள் போன்ற பல மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

தோல்வி விரக்தியில் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசி வருகிறாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டாா் எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்

பாஜகவுக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மடிக்கனிணி திட்டம் அதிமுக திட்டம் தான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


