இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சோலையாண்டவா் கோயிலில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

News image

பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சோலை வளா்த்த அய்யனாா் சுவாமி. அருகில் விநாயகா், கருப்பா் சுவாமிகள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:06 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூா் அருகே கொத்தரி சோலையாண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

நிகழாண்டு பராபவ சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். மாலையில் மேளதாளத்துடன் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பூத்தட்டு எடுத்துக்கொண்டும், மின்னொளி அலங்கார ஊா்திகளில் மலா்களை எடுத்துவந்தும் ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா். பின்னா், சுவாமிக்கு பூக்களைத் தூவி தரிசனம் செய்தனா். பள்ளத்தூா், கானாடுகாத்தான், கோட்டையூா், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.