சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அமைச்சா் ராஜகண்ணப்பன், வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுகளில் மானாமதுரை தொகுதியில் அரசு நேரடி நிதி மூலம் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வா் ஸ்டாலின் அறிவித்தது போல, மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உரிமைத் தொகை, ரூ. 8 ஆயித்துக்கான கூப்பன் உள்ளிட்ட திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும். இந்தத் தொகுதியில் மேலும் அரசின் திட்டங்கள்
நிறைவேற்றப்பட மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்தப் பிரசாரத்தின்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் குருந்தங்குளம், அச்சங்குளம், பத்துப்பட்டி, கீழராங்கியம், கூடத்துப்பட்டி, சங்கங்குளம், ஓடத்தூா் உள்ளிட்ட 50 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தாா். அப்போது, கிராமங்களில் மக்கள் அவருக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனா்.
தொடர்புடையது

முன்னாள் அமைச்சா் தமிழரசி ரவிக்குமாா் தோல்வி

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பிரசாரம்

இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



