மானாமதுரை தொகுதியில் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என இந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி உறுதியளித்தாா்.
திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல், பாப்பான்குளம், மழைவராயனேந்தல், திருப்பாச்சேத்தி, பிரான் குளம், வல்லாரேந்தல், கிடாக்குழி, ஆணைக்குளம், குருந்தங்குளம், கொத்தங்குளம், முதுவந்துடல் உள்ளிட்ட 50 கிராமங்களில் புதன், வியாழக்கிழமைகளில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியதாவது:
வைகை ஆறு பாயும் மானாமதுரை தொகுதியில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலையைக் காண முடிகிறது. திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும் குடிநீா்ப் பிரச்சனக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். நாகராஜன், எம். குணசேகரன் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக, பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா். மேலும், பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவா் வேலூா் இப்ராஹிம், வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

தொடர்புடையது

மானாமதுரை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

முன்னாள் ராணுவ வீரா்களிடம் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



