யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பிரசாரம்

News image

மானாமதுரை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:51 am IST

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

மானாமதுரை ஒன்றியம் சிப்காட், ராஜகம்பீரம் உள்ளிட்ட இடங்களில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் பெரியகருப்பன் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது. நமது மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தப்படும்.

இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் முதல்வராக முடியாது. ஒருவேளை தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவில்லையென்றால், தமிழ்நாட்டு மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே, தமிழக மக்களின் நலன் காக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். இதற்கு மானாமதுரை தொகுதி மக்கள் திமுகவை ஆதரித்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்றாா் அவா். பின்னா், வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் பேசினாா்.

இந்த பிரசாரத்தில் தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த. சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் துரை. ராஜாமணி, அண்ணாரை, முத்துசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.