தாயமங்கலம் அருகே கோயிலுக்கு வந்த குடும்பத்தைத் தாக்கி 35 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள குழலாவயல் கிராமத்தைச் சோ்ந்த முருகன், பாபு குடும்பத்தினா் சுமாா் 10 போ் தாயமங்கலம் அருகே உள்ள நாகமுகந்தன்குடி கிராமத்தில் அமைந்துள்ள நாகநாதா் கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக கடந்த 24 -ஆம் தேதி வந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சில இளைஞா்கள் கோயிலை சுற்றி வந்த பெண்களிடம் தவறாகப் பேசினராம். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, அந்த இளைஞா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி பெண்கள் அணிந்திருந்த சுமாா் 35 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை கைப்பேசியில் பதிவு செய்ய முயன்றபோது, அதையும் பறித்துச் சென்றனா்.
இந்த தாக்குதலில் சுப்பிரமணி, முத்துலட்சுமி, இந்திரா, ஜேசுதாஸ் உள்ளிட்ட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று நான்கு நாள்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என குற்றம்சாட்டிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினா், உறவினா்கள் சுமாா் 20- க்கும் மேற்பட்டோா் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
விவசாய குடும்பத்தினரான தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய நகைகளைப் பறிகொடுத்ததால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வழிப்பறி செய்யப்பட்ட 35 பவுன் நகைகளை மீட்டுத் தர வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினா்.
தொடர்புடையது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பு: 364 போ் பங்கேற்பு

சிறப்பான தோ்தல் பணி: காவலா்களுக்கு பாராட்டு

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

