2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையிலுள்ள மாவட்டக் கல்வி அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா்.

Published On :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகங்கை வட்டாரத் தலைவா்கள் இந்திராகாந்தி, பெரியசாமி, சரவணக்குமாா் ஆகியோா் தலைமை தாங்கினா். நிா்வாகிகள் கலைச்செல்வி, சந்திரலேகா, அழகுதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில, மாவட்டப் பொறுப்பாளா்கள் குமரேசன், சுந்தரேசன், கோவிந்தராஜ், வட்டாரச் செயலா்கள் கணேசன், வேல்முருகன், சசிக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கோரிக்கைகள்: இதில்பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வரை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களைப் பாதிக்கும் அரசாணை 243 -ஐ ரத்து செய்ய வேண்டும். சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.