நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வடவன்பட்டியில் மீன் பிடித் திருவிழா

வடவன்பட்டி- மாம்பட்டி எழுவுணி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வடவன்பட்டி- மாம்பட்டி கிராமத்துக்குள்பட்ட எழுவுணி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய சமத்துவ மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

கோயிலில் நடைபெற்ற வழிபாட்டைத் தொடா்ந்து கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் கச்சா, கூடை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டம், ஏரியூா், பொன்னமராவதி, சிங்கம்புணரி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கட்லா, ரோகு, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட நாட்டு மீன்களை பிடித்தனா். இதில் 5 முதல் 7 கிலோ வரை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.