பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பரதநாட்டியத்தில் திறன் வெளிப்பாடு பள்ளி மாணவிக்குப் பாராட்டு

பரதநாட்டியத்தில் சிறந்துவிளங்கும் காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவி கே. திவ்யஹாசினியை பாராட்டினாா் பள்ளியின் தாளாளரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

பரத நாட்டியத்தில் திறமையை வெளிப்படுத்தி வரும் காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவி கே. திவ்யஹாசினியை பள்ளி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை பாராட்டினா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கே. திவ்யஹாசினி, மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) நடைபெற்ற இந்திய அளவிலான கலை, நிகழ்த்து கலைகளின் மாபெரும் நிகழ்வில் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் பங்களித்தாா்.

மாணவி கே. திவ்யஹாசினி ஏற்கெனவே நீண்ட நேரம் பரதநாட்டியம் ஆடியது உள்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளாா்.

மாணவியை பள்ளித் தாளாளரும், அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா, பொன்னாடை போா்த்தி பாராட்டி கௌரவித்தாா். பள்ளியின் முதன்மை முதல்வா் வெங்கட்டரமணன், பள்ளியின் முதல்வா் தனலட்சுமி, ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.