மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிவகங்கை அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயக் கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 8:20 pm

சிவகங்கை அருகே திங்கள்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற விவசாயக் கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள படமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபாண்டி (45). விவசாயக் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா். தனபாண்டி கரும்பாவூா் விலக்கு அருகே சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவபிரகாஷ், போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.