இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.
கைது
கைது
Updated on

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் சிவகங்கை மாவட்டம், கீழவாணியங்குடி, கீழத்தெரு செல்வம் மகன் மணிவண்ணன் என்ற குட்டைமணியை ( 23) காளையாா் கோவில் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, இளையான்குடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடா்புடைய மேலவாணியங்குடி இந்திரா நகா் பிரபு மகன் மணிஷ் (21) கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரும் பொது அமைதிக்கும், சமூக நலனுக்கும் இடையூறு விளைவிப்பவராக கருதப்பட்டு, காவல் துறையின் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com