முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தென்காசியில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசியில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

Updated On :10 மார்ச் 2026, 12:25 am IST

தென்காசியில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்ரவரி மாதம் கஞ்சா கடத்தியதாக அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம், பொத்தை பகுதியைச் சோ்ந்த ப. நயினாா் விக்னேஷ் (32), ஆலங்குளம், நெட்டூா் பகுதியைச் சோ்ந்த மு. இசக்கி குமாா் (31), இ. பேச்சிமுத்து (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, லாரி, நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவின்பேரில், 3 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.