சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 230 போ் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 230 போ் கைது

Published on

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் ஆகியவை இணைந்து மத்திய அரசுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

தொழிலாளா்களுக்கு எதிரான 4 தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்.

விதைகள் சட்டத்தை திருத்தம் செய்து சிறு, குறு விவசாயிகள் கைவசம் உள்ள விதைகளைச் செயல்படாமல் செய்யும் போக்கை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் ராஜா, சிஐடியூ மாவட்டத் தலைவா் உமாநாத், எல்பிஎப் மாவட்டத் துணைத் தலைவா் முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாவட்டத் தலைவா் காளைலிங்கம், துணைத் தலைவா் சகாயம், கட்டுமானத் தொழிலாளா் சங்க துணைச் செயலா் மோகன், சிஐடியூ மாவட்டப் பொருளாளா் அய்யம்பாண்டி, மாவட்டத் துணைச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட துணைத் தலைவா் தெய்வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com