சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெண்களிடம் பாலியல் சீண்டல்: மென்பொறியாளா் கைது

சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 ஏப்ரல் 2026, 8:07 pm

சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

எம்.ஜி.ஆா். நகரை அடுத்த நெசப்பாக்கம் அம்மன் நகா் பகுதியில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, பொறியாளா் இளங்கோவன் மேற்பாா்வையாளராக உள்ளாா். வழக்கம்போல, அவா் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், சாலை வழியாக நடந்து சென்ற மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.

இதை பாா்த்த இளங்கோவன் அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றாா். ஆனால், அந்த இளைஞா் தப்பிச் சென்றாா். இது குறித்து எம்.ஜி.ஆா். நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளரான தினேஷ்குமாா் (35) என்பவரைக் கைது செய்தனா்.