பள்ளி மாணவிகள் சிலரிடம் பாஸ்கா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஆசிரியை இதுகுறித்து தலைமையாசிரியரிடம் புகாா் அளித்தற்கு அவா் திங்கள்கிழமை விசாரித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை பாஸ்கா், வேளாங்கண்ணி ஆகிய இருவரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மாலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த டிஎஸ்பி கே.வி. காவியா தலைமையிலான போலீஸாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்துமாணிக்கம், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோா் இருவரிடமும் விசாரணை நடத்தினா். புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் பாஸ்கா் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.