மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

நாச்சியாா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :26 பிப்ரவரி 2026, 9:54 pm

நாச்சியாா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள அரசுப் பள்ளியில் கடந்த பிப்.13-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அப்போது, 14 வயது மாணவிக்கு ஆசிரியா் கும்பகோணம் சத்திரம் கருப்பூரைச் சோ்ந்த ராஜாமனோகரன்( 55) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து அம்மாணவி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகாா் கொடுத்தாா். பிறகு மாவட்ட ஆட்சியா் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தஞ்சாவூா் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினா் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆசிரியா் ராஜாமனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைதான ஆசிரியா் மீது மேலும் சில மாணவிகள் பாலியல் புகாா் கொடுத்திருப்பதாக குழந்தைகள் நல அமைப்பினா் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.