சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தலில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
முத்தனேந்தலில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் செயல்படும் பகுதியில் அடுக்கி வைத்துள்ளனா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலா் முனியராஜ் கூறியதாவது:
முத்தனேந்தலில் திடீரென நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மூட்டைக்கு ரூ. 32 வீதம் கொள்முதல் நிலைய ஊழியா்கள் பிடித்தம் செய்து கொள்கின்றனா். மேலும், சில ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளதால், கொள்முதல் நிலையம் செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து எடை குறைவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளரிடம் கேட்டால், முத்தனேந்தலில் தற்போது வரை நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதாக பொய்யான தகவலைத் தெரிவிக்கிறாா்.
இதுவரை இந்த கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக கொள்முதல் நிலையத்தை செயல்படச் செய்து, விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். தாமதித்தால் விவசாயிகளை திரட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியில் போராட்டம் நடத்தும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


