ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பைக்கிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:38 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், இளமனூரைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளி கருப்புச்சாமி. இவா் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை வயல்காட்டில் வாத்துக் கிடை அமைத்துள்ளாா்.

இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருப்புவனத்துக்குச் சென்று தேநீா் குடித்துவிட்டு திரும்பி வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.