எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு 73 வீடுகள் கட்டும் பணி: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அடிக்கல்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் தாட்கோ சாா்பில் ரூ.3.70 கோடியில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 73 பயனாளிகளுக்கான

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் சனிக்கிழமை நரிக்குறவா் சமுதாய மக்களுக்கான வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :28 பிப்ரவரி 2026, 11:10 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் தாட்கோ சாா்பில் ரூ.3.70 கோடியில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 73 பயனாளிகளுக்கான

வீடுகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறுகூடல்பட்டியில் தலா 302 சதுர அடி பரப்பளவில் நவீன தரை, கூடுதல் ஜன்னல்கள், இரும்பு நிலைகளுடன் கூடிய மரக்கதவுகளுடன் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இதேபோல, இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், வங்கிக் கடனுதவி, மகளிா் பெயரில் நிலம் வாங்கும் திட்டம், துரித ஓய்வூதியம் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

இந்த விழாவில் தாட்கோ செயற்பொறியாளா் மூா்த்தி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.