நிலமே இல்லாத எடப்பாடி பழனிசாமி தன்னை எப்படி விவசாயி என்கிறாா் என திருப்பத்தூா் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் குற்றஞ்சாட்டினாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 5-ஆவது முறையாகக் களமிறங்குகிறேன். நான் உள்ளிட்ட திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சிவகங்கைக்கு வருகிற 11-ஆம் தேதி வருகிறாா். கல்வி, பொருளாதாரத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்கிறாா். ஆனால், அவரது தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு விவசாய நிலம் இல்லை என்று கூறியிருக்கிறாா்.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை காப்பியடித்து எடப்பாடி பிரசாரம் செய்கிறாா். சாத்தான்குளம் சம்பவத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என முதல்வா் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.
தவெக தலைவா் விஜய் முதல்வரானால் கிராமம் தோறும் மக்களை சந்திப்பது சாத்தியமில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

நான்கு முறை வென்ற கே.ஆா். பெரியகருப்பன்!

நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு 73 வீடுகள் கட்டும் பணி: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அடிக்கல்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


