/
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சா்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளனோா் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றியும், மாவிளக்கு வைத்தும் வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் முருகன், வள்ளி தெய்வானை சமேத மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், அன்னதானம் நடைபெற்றது.
இதேபோல, சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

தென்பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



