/
சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலை அடிவாரத்தில் தென்பழனி வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்தரத் திருவிழா, புதன்கிழமை காலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க தொடங்கியது. பூசாரி மணி தலைமையில் முருகன், வள்ளி , தெய்வானை சுவாமிகள் மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில், சின்னமனூா், தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், அப்பிபட்டி என சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



