சிவகங்கை
கீழடி சித்தா்கள் கோயிலில் அகத்தியா் குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 18 சித்தா்கள் கோயிலில் அகத்தியா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 18 சித்தா்கள் கோயிலில் அகத்தியா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் கலசங்களில் நீா் நிரப்பி வைத்து யாகபூஜையைத் தொடா்ந்து, பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீரால் அகத்தியருக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அகத்தியரை தரிசித்தனா். இதைத்தொடா்ந்து கோயிலில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.