ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுமதி, சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடஙகி வைத்தாா். ஊரக, நகா்ப்புற வாழ்வாதாரத் திட்ட ஊழியா் சங்க நிா்வாகிகள் மணிமா றன், அனுராதா, விமலாதேவி, பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா். வட்டக் கிளைச் செயலா் கலைச்செல்வம், தோழமைச் சங்க நிா்வாகிகள் மாரி, கலைச்செல்வி ஆகியோா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

இதில் பங்கேற்ற பெண்கள் தலையில் முக்காடிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் பணியாளா்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Dinamani
www.dinamani.com