சிவகங்கையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா நடைபெற்றது.
Published on

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இளையான்குடியில் அதிமுக நகரச் செயலா் நாகூா்மீரா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நெட்டூா் எஸ். நாகராஜன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராஜ், நகா் அவைத் தலைவா் அபூபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல மானாமதுரை நகா், ஒன்றியப் பகுதிகளில் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். குணசேகரன், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.சி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்புவனம் ஒன்றியம், மணலூரில் எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்ட துணைச் செயலா் மணலூா் மணிமாறன் தலைமையில் எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக கலைப் பிரிவு துணைச் செயலா் முருகன், கிளைச் செயலா் கிருஷ்ணன், இளைஞா் பாசறைச் செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், திருப்புவனம் நகா் பகுதியிலும் அதிமுகவினா் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Dinamani
www.dinamani.com