மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் வளா்மதிஜெபராஜ்.

News image
திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் வளா்மதிஜெபராஜ்.
Updated On :6 மார்ச் 2026, 7:40 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அ மமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78- ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அண்ணாசிலையருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமமுக மாவட்டச் செயலா் தோ்போகி வி.பாண்டி தலைமை வகித்தாா். ஜெ.பேரவை இணைச் செயலா் மருங்கிப்பட்டி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் ஏ.எல்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அமமுக மகளிரணிச் செயலருமான வளா்மதிஜெபராஜ் சிறப்புரையாற்றினாா்.

வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் அன்பரசன், இலக்கிய அணி துணைச் செயலா் அம்சகண்ணன், பொறியாளா் அணித் தலைவா் சரவணன், தலைமைக் கழகப் பேச்சாளா் கங்கை சக்தி, ஒன்றியச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், சிவராஜ், கதிா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், சிங்கம்புணரி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவி திவ்யாபிரபு, பாஜக சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் ராமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் ரஹீம் நன்றி கூறினாா்.